Latestமலேசியா

கோத்தா திங்கியில் பெண்ணை தாக்கிய காணொளி வைரல்: போலீஸ் விசாரணை

கோத்தா திங்கி, செப்டம்பர் 23 – கோத்தா திங்கியிலுள்ள பெல்டா கிளெடாங் (Felda Kledang, Gugusan Adela), குகுசன் அடேலா பகுதியில் ஆடவன் ஒருவன் பெண்ணைத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்தெண்டன் யூசோஃப் ஒத்மான் (Superintenden Yusof Othman) கூறுகையில், 44 விநாடிகள் கொண்ட அந்தக் காணொளி இன்று காலை 9.30 மணியளவில் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். காணொளியில் அந்த ஆண் பெண்ணை தள்ளியும் காலால் உதைத்தும் தாக்குவது பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த பெண்ணே போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குற்றவியல் சட்டம், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவைகளின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை அணுகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

,காணொளியில் அந்த ஆண் பெண்ணைத் தாக்கியதுடன், அவரை திட்டி அவதூறான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாகவும், சிலர் அவரைத் தடுத்து சமாதானப்படுத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!