Latestஉலகம்மலேசியா

ஷாங்காயில் அமைச்சர் ஙா கோர் மிங்கிற்கு ‘Smart City Leadership’ விருது!

ஷங் ஹாய், செப்டம்பர்-23,வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்குக்கு, சீனா ஷங் ஹாயில் நடைபெற்ற ‘Tomorrow.City’ நிகழ்வில் ‘Smart City Leadership’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

​மலேசியாவின் நவீன நகரமயமாக்கல், நிலையான வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட ‘விவேக நகர’ முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது

​நிகழ்வின் தொடக்க விழாவில் உரையாற்றிய ஙா கோர் மிங், Smart City மேம்பாடு என்பது வெறும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலோடு மட்டும் நின்றுவிடக்கூடாது; அது மக்களின் தேவைகளையும் நல்வாழ்வையும் முதன்மையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

​தொழில்நுட்பம் என்பது இறுதி இலக்கு அல்ல; அது பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சமத்துவமான சமூகங்களை உருவாக்குவதற்கான ஒரு கருவி மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

​தொழில்நுட்பம், கொள்கை மற்றும் மனிதப் பண்புகள் இணையும் போதே உண்மையான நகர மாற்றம் சாத்தியமாகும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ‘மலேசிய Smart City கட்டமைப்பு’ மூலம் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட மலேசியா உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அலுவல் பயணமாக ஷங் ஹாய் சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குழுவில் ஙா கோர் மீங் இடம்பெற்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!