Latestஉலகம்

2019 ஈஸ்டர் தாக்குதல்: 15 குற்றவாளிகளுக்குத் தலா 220 ஆண்டுகள் சிறை; இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

​கொழும்பு, செப்டம்பர்-23,இலங்கையில் 2019-ஆம் ஆண்டு 279 பேரைக் கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

​3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

​முன்னதாக, வழக்கிலிருந்த 24 பேரில் 14 பேர் மீது பயங்கரவாத சதி, கொலை மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.

15-ஆவது நபர் சில குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில், அவர்கள் 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளிகள் 15 பேரின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

​இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.

​இந்த சதித்திட்டத்திற்கு ஆதரவளித்து முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக Naufer Moulavi என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

​2019 ஏப்ரல் 21-ஆம் தேதி 3 தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு விடுதிகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 279 பேர் பலியாயினர்; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

​இலங்கையில் பல ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், குற்றவாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்கும் வகையில் இந்த கடுங்காவல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!