Latestமலேசியா

ஜோகூர் பாரு Sutera Mall-இல் Colours of India-வின் பிரம்மாண்ட தீபாவளி விழா; அக்டோபர் 7-11 வரை!

ஜோகூர் பாரு – தீபாவளித் திருநாளை முன்னிட்டு, Colours of India ஏற்பாட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘Southeast Asia Deepavali Festival & Trade Expo 2026’, வரும் அக்டோபர் 7 முதல் 11ஆம் தேதி வரை ஜோகூர் பாருவிலுள்ள Sutera Mall-இல் களைகட்டவுள்ளது!

ஒவ்வோர் ஆண்டும் Colours of India ஏற்பாட்டில் நடைபெறும் தீபாவளி வர்த்தகக் கண்காட்சி, அதன் பிரம்மாண்ட ஏற்பாடுகள், புதுமையான சிறப்பம்சங்கள் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளால் தனித்துவம் பெற்று வருகிறது.

அந்த வகையில், கடந்த காலங்களில் தாங்கள் நடத்திய விழாக்களின் சாதனைகளை இம்முறை தாங்களே முறியடிக்கும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்னும் பிரம்மாண்டமாக இந்நிகழ்வை நடத்த Colours of India தயாராகி வருகிறது.

‘10 Festivals Under One Roof’ என்ற சிறப்பம்சத்துடன், ஆன்மிகம், ஆடை அலங்காரம், பாரம்பரிய உணவு, கலை, கலாச்சாரம் மற்றும் வணிகம் எனப் பல்வேறு அம்சங்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கும் மாபெரும் தீபாவளிக் கொண்டாட்டமாக இவ்விழா அமையவுள்ளது.

குறிப்பாக, இம்முறை அதிகமான அனைத்துலகக் கலைஞர்களின் பங்கேற்பு, விரிவான வணிக வாய்ப்புகள் மற்றும் பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன், இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தீபாவளித் திருவிழாவை நடத்த ஏற்பாட்டுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இவ்விழாவின் அதிகாரப்பூர்வ மின்னியல் ஊடகப் பங்காளராக வணக்கம் மலேசியா இணைந்துள்ளது.

விற்பனைக் கடைகள், 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், விறுவிறுப்பான போட்டிகள் என ஐந்து நாட்களும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் பொதுமக்களுக்காகக் காத்திருக்கின்றன.

தீபாவளிக்கான புத்தாடைகள், கண்கவர் ஆபரணங்கள், இனிப்பு வகைகள், பாரம்பரிய உணவுகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி மகிழ்வதற்கான வாய்ப்பும் இவ்விழாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் தீபாவளிச் சந்தையாக மட்டுமின்றி, கலை, கலாச்சாரம், உணவு, வணிகம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்தையும் ஒன்றிணைக்கும் மாபெரும் தீபாவளித் திருவிழாவாக இந்நிகழ்வு அமையவுள்ளது.
ஜோகூர் மக்களே! இந்தத் தீபாவளியை இன்னும் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகுங்கள்!

வரும் அக்டோபர் 7 முதல் 11ஆம் தேதி வரை, ஜோகூர் பாரு Sutera Mall-இல் நடைபெறும் ‘Southeast Asia Deepavali Festival & Trade Expo 2026’-க்கு குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வருகை தந்து, ஐந்து நாள் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இணைந்து மகிழுங்கள்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!