Latestமலேசியா

ஜோகூர், பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ஜோகூர், செப்டம்பர் 22 – ஜோகூர் பத்து பஹாட் கடற்பகுதியில் இன்று மாலை 4.55 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் பத்து பஹாட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டன.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MetMalaysia தெரிவித்ததன்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பத்து பஹாட்டிலிருந்து 27 கிலோமீட்டர் தென்மேற்கே அமைந்திருந்தது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக MetMalaysia தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலைமையைத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தீபகற்ப மலேசியாவில் செயல்பாட்டில் உள்ள புவியியல் பிளவுகளால் உள்ளூர் நிலநடுக்கங்கள் ஏற்படலாம். மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சுமாத்திரா மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் ஏற்படும் பெரிய நிலநடுக்கங்களின் அதிர்வுகளும் உணரப்படலாமென MetMalaysia தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!