
கோத்தா கினாபாலு, ஜூலை-10 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, சபாவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற அதிகாரி ஒருவரை லஞ்ச புகாரில் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைத்துள்ளது.
சபா MACC இயக்குனர் டத்தோ எஸ். கருணாநிதி அதனை உறுதிப்படுத்தினார்.
பொருள் அளவையாளரான 30 வயது அவ்வாடவர், ஊராட்சி மன்றத்தின் குத்தகைகளைப் பெற்றுத் தந்ததற்கு கைமாறாக பல குத்தகைத்தாரர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 200,000 ரிங்கிட்டுக்கும் மேல் லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
வறுமை ஒழிப்பு, சபாவுக்கு ஏற்ற புதிய வீடுகளைக் கட்டுதல், குப்பைகளை அகற்றும் மையங்களை சுத்தம் செய்தல் மற்றும் வாகன உதிரி பாகங்களை வழங்குதல் உள்ளிட்ட ஊராட்சி குத்தகைத் திட்டங்களைப் பெறுவதற்கு, அப்பணம் கைமாறியுள்ளது.
சந்தேக நபர், 2021 முதல் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த ஊழல் குற்றத்தை புரிந்ததாக நம்பப்படுகிறது.
2009 MACC சட்டத்தின் கீழ் இந்த ஊழல் குற்றச்சாட்டு விசாரிக்கப்படுவதாக கருணாநிதி சொன்னார்.