Latestமலேசியா

ஊழல் தடுப்பு ஆணையர் அசாம் பாக்கி பதவி விலகக் கோரி SOGO-வில் பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

ஊழல் தடுப்பு ஆணையர் அசாம் பாக்கி பதவி விலகக் கோரி SOGO-வில் பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

 

கோலாலம்பூர், பிப்ரவரி-15,

தனியார் நிறுவன பங்கு சர்ச்சையில் சிக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி பதவி விலக் கோரி, கோலாலம்பூர் SOGO பேரங்காடி வளாகத்தில் இன்று பேரணி நடைபெற்று வருகிறது.

Himpun Dan Lawan : Tangkap Azam Baki என்ற பெயரில் அரசு சார்பற்ற அமைப்புகள் நடத்தும் அப்பேரணி மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

“Tangkap Azam Baki” என்ற முழக்கங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் அரசியல் கட்சியினர், NGO-கள், மாணவர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என சுமார் 500 பேர் SOGO-விலிருந்து டத்தாரான் மெர்டேக்கா வரை ஊர்வலமாகச் சென்றனர்.

பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, செத்தியாவங்சா எம்.பி நிக் நஸ்மி நிக் அஹ்மாட், சுபாங் எம்.பி Wong Chen, மூடா கட்சியின் இடைக்காலத் தலைவர் Amira Aisya Abdul Aziz, பெர்சே தலைவர் Faisal Abdul Aziz, சமூக ஆர்வலர் Hishamuddin Rais உள்ளிட்டோரையும் பேரணியில் காண முடிந்தது.*

பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய Wong Chen, அசாம் பாக்கி பதவி விலகலை வலியுறுத்தினார்.

 

பேரணியில் பங்கேற்ற மற்றவர்களும் அதே கோரிக்கை விடுத்தனர்.சர்ச்சைக்குரிய தொழில் அதிபர் Albert Tei-zயும் அவர்களில் அடங்குவார்.

பேரணி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடைபெற போலீஸார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளர்.

Velocity Capital Partner Bhd நிறுவனத்தில் அசாம் பாக்கி 17.7 *மில்லியன்* பங்குகளை வைத்திருந்ததாக Bloomberg செய்தி வெளியிட்ட நிலையில், அவருக்கு எதிராக பல தரப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதனை விசாரிக்க அரசாங்கமும் சிறப்புப் பணிக் குழுவை அமைத்துள்ளது.

விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்லுமாறு அரசாங்க ஆதரவு எம்.பிக்கள் உட்பட பலர் நெருக்குதல் கொடுத்துள்ள போதும், அதற்கு அவசியமில்லை என அவர் கூறியுள்ளார்.

அவதூறு பரப்பியதாகக் கூறி Bloomberg மீது சட்ட நடவடிக்கையும் அசாம் பாக்கி தொடங்கியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!