
கோலாலம்பூர், ஜூன் 5 – எகிப்தின் அலெக்சாண்டரியா பல்கலைகழகத்தில் (Alexandria University) மருந்தியல் (PharmD) படிக்கும் மலேசிய மாணவர்கள் எதிர்கொள்ளும் பட்ட அங்கீகாரப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு பிரதமர் அன்வர் இப்ராஹிம், உயர்கல்வி அமைச்சு (KPT) மற்றும் சுகாதார அமைச்சு (KKM) ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தப் பாடத்திட்டத்தின் கல்வி அங்கீகாரத்திற்கு ம் எந்தத் தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மலேசியாவில் மருந்தாளுநராக பதிவு செய்ய தேவையான தொழில்முறை அங்கீகாரம் பெற, Malaysian Pharmacy Board-இன் ஒப்புதல் அவசியம் என கூறப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரப் பிரச்சினையால் எகிப்தில் கல்வி கற்கும் குறைந்தது நான்கு மலேசிய மாணவர்கள் கட்டாயத் தேர்வு, பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளில் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மருந்தியல் துறையின் தொழில்முறை தரநிலைகளை பாதிக்காமல் இந்த விவகாரத்திற்கு விரைவில் முழுமையான தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது



