Latestஉலகம்சிங்கப்பூர்மலேசியா

உலகின் மிகவும் வலிமையான கடப்பிதழ் பட்டியலில் சிங்கப்பூருக்கு மீண்டும் முதலிடம்; மலேசியாவுக்கு 7வது இடம்

கோலாலம்பூர், ஜூலை-23-உலக நாடுகளின் கடப்பிதழ்களின் வலிமையை அளவிடும் Henley கடப்பிதழ் குறியீட்டுப் பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மலேசியாவோ, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுடன் இணைந்து உலகளவில் ஏழாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

​சிங்கப்பூர் குடிமக்கள் இப்போது முன்விசா இல்லாமல் உலகளவில் 192 இடங்களுக்கு எளிதாகப் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

​இந்தத் தரவரிசையில், ஐக்கிய அரபு சிற்றரசு (UAE) மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

3 இடங்கள் உயர்ந்துள்ள UAE, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் இணைந்து 188 இடங்களுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

​அதே நேரத்தில், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் வெறும் 22 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க அனுமதி பெற்றுள்ளது.

இதன் மூலம் முதலிடத்தில் உள்ள சிங்கப்பூருக்கும் அதற்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி தொடர்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!