Latestமலேசியா

மலை அடையாளச் சின்னத்தில் சீன எழுத்துகள் இல்லை; ஈப்போ மாநகர மன்றம் விளக்கம்

ஈப்போ, ஜூலை-23-பேராக், ஈப்போவில் புகழ்பெற்ற மலைப்பக்க அடையாளச் சின்னத்தில் சீன எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என, ஈப்போ மாநகர மன்றமான MBI தெளிவுப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் குழு ஒன்றில் பரவிய அந்தப் படம், AI தொழில்நுட்பம் அல்லது டிஜிட்டல் எடிட்டிங் மூலம் உருவாக்கப்பட்ட போலி படம் என ஈப்போ மாநகர மேயர் Zamakhshari Hanipah உறுதிப்படுத்தினார்.

​அந்த அடையாளச் சின்னம் தற்போது எந்த எழுத்துகளுடனும் இல்லை.

கட்டமைப்பைச் சீரமைக்கும் வழக்கமான பரிசோதனை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக அந்தச் சின்னம் கடந்த ஜூலை 15-ஆம் தேதி பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

​வானிலை நிலவரத்தைப் பொறுத்து, ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 6 வரை அந்தச் சின்னம் மீண்டும் படிப்படியாகப் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பொது மக்களிடையே குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்று ஏமாற்றுப் படங்களை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற சரிபார்க்கப்படாத போலித் தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!