Latestமலேசியா

சபாவில் சக ஊழியரைக் கொன்ற இந்தோனேசியர்; 40 ஆண்டுகள் சிறை

சபா, அக்டோபர் 21 – சபா, தாவாவ் (Tawau) பகுதியிலுள்ள சைம் டார்பி (Sime Darby) தோட்டத்தில் சக ஊழியரைக் கொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 53 வயதான இந்தோனேசியருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாவாவ் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கினார். 2023ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி, 33 வயதுடைய நபரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பர்களுடன் தோட்டத்திலுள்ள குளத்தில் மீன்பிடித்துவிட்டு முன்னதாகத் தனியாகத் திரும்பியுள்ளார். பின்னர், அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட நண்பர்கள், சந்தேக நபர் கையில் ஈட்டியுடன் அந்தப் பகுதியில் செல்வதைக் கண்டனர். தொடர்ந்து சோதனையிட்டபோது, கொலை செய்யப்பட்ட அந்த ஆடவர் உடலில் பல குத்துக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

குற்றவாளிக்கு 2023ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி முதல் சிறைத்தண்டனை கணக்கிடப்படும். அவரது வயதைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் பிரம்படி தண்டனை விதிக்கவில்லை. சிறைத்தண்டனை முடிந்ததும், அவரைத் தாய்நாட்டுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!