
உலு சிலாங்கூர், ஜூலை-23-சிலாங்கூர், குவாலா குபு பாருவில் ஏற்பட்ட குடும்பத் தகராறு கொடூரத்தில் முடிந்துள்ளது.
தனது சொந்த அண்ணனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவரைத் தாக்கிக்கொன்றதாகக் கூறப்படும் தம்பியைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
29 வயது மதிக்கத்தக்க அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் எம். மணிமாறன் தெரிவித்தார்.
26 வயது சந்தேக நபரான தம்பி உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டார்.
கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ள அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கப் போலீஸ் நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



