
குவாலா பெராங், செப்டம்பர்-6,காற்றின் தரம் மோசமடைந்து, காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு (API) 400-ரைத் தாண்டினாலே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது.
இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ Arthur Joseph Kurup இதனைத் தெரிவித்துள்ளார்.
சரவாக்கின் செரியான் மாட்டத்தில் API குறியீடு 500-ரைக் கடந்ததை அடுத்து, அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவே இந்நடவடிக்கை எனக் கூறினார்.
அவசரநிலை காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்படுவதுடன், சுவாசக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றார் அவர்.
இதனிடையே, சரவாக், கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் செயற்கை மழையைப் பொழிய வைக்கும் நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.



