
பத்து மலை, செப்டம்பர்-6,சிலாங்கூர், ஜாலான் SBC 12, ஸ்ரீ பத்து கேவ்ஸ் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாகப் பொது வாகன நிறுத்துமிடங்களைப் பிடித்து வைக்கும் போக்குக்கு எதிராக நகராண்மைக் கழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சரண் எனும் குடியிருப்பாளர் அளித்துள்ளப் புகாரில், கூம்புகள், நாற்காலிகள் மற்றும் தடைகளை வைத்துப் பொது நிறுத்துமிடங்களைச் சிலர் தங்களின் சுயத் தேவைகளுக்காக ஆக்கிரமித்துக் கொள்வதாகக் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இதனால், அனுதினமும் வாகனங்களை நிறுத்த இடமின்றித் தவிக்கும் குடியிருப்பாளர்களிடையே அடிக்கடி வாக்குவாதங்களும் அசௌகரியங்களும் ஏற்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
இப்பிரச்னை குறித்து நகராண்மைக் கழக அதிகாரிகள் மற்றும் குடியாருப்புக் கட்டட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, நிலைமை மேலும் மோசமடைந்து குடியிருப்புவாசிகளிடையே பெரிய மோதல்கள் ஏற்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அத்தகைய தடைகளை அகற்றி, தவறிழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எ



