Latestவிளையாட்டு

எம்பாப்பே மீண்டும் அபாரம்; மொரோக்கோவை 2-0 என வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

 

 

போஸ்டன், ஜூலை-10 – உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில், மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.

 

ஆட்டத்தின் தொடக்கத்தில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே பெற்ற பெனால்டி வாய்ப்பு, மொராக்கோ கோல் காவலரால் தடுக்கப்பட்டது.

 

இருப்பினும், ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே ஒரு அற்புதமான கோலை அடித்து பிரான்சுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

 

இது இப்போட்டியில் அவர் அடித்துள்ள 8-ஆவது கோலாகும்.

 

தொடர்ந்து 66-வது நிமிடத்தில், எம்பாப்பே வழங்கிய பந்தை உஸ்மான் டெம்பேலே கோலாக மாற்ற, பிரான்ஸ் 2-0 என வெற்றியை உறுதிச் செய்தது.

 

இந்த வெற்றியின் மூலம், பிரான்ஸ் வரும் செவ்வாய்க்கிழமை டல்லாஸ் நகரில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது.

 

அதில் வெற்றிப் பெற்றால், தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கிண்ண இறுதியாட்டத்திற்கு பிரான்ஸ் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!