
ஷா ஆலம், ஜூலை 9 – சிலாங்கூர் போலீசார், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA), செப்பாங், கோத்தா வாரிசானில் மேற்கொண்ட நான்கு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில், 13.34 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 116.2 கிலோகிராம் கஞ்சாக்களை பறிமுதல் செய்து, நான்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 25 முதல் 40 வயதுக்குட்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரு வெளிநாட்டு ஆண்கள், ஒரு உள்ளூர் ஆண் மற்றும் இரு உள்ளூர் பெண்கள் அடங்குவர். கைது செய்யப்பட்ட மூன்று உள்ளூர்வாசிகளுக்கு ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் பிற குற்ற வழக்குகள் தொடர்பான பதிவுகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



