Latestமலேசியா

எலி எச்சம் காரணமாக பினாங்கு பள்ளியின் சிற்றுண்டி நிலையம் 14 நாட்கள் மூடுவதற்கு உத்தரவு

ஜோர்ஜ் டவுன், மே 15 – பினாங்கிலுள்ள ஒரு பள்ளியின் சிற்றுண்டி நிலையத்தில் நடத்தப்பட்ட சுகாதார பரிசோதனை நடவடிக்கையில் , அதன் வளாகத்தில் எலி எச்சங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சிற்றுண்டி நிலையத்தை 14 நாட்களுக்கு மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, நேற்று நண்பகல் முதல் மே 27 ஆம்தேதிவரை , அதாவது 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று பினாங்கு கல்வி இயக்குநர் ஜியாவுடின் மாட் சாட் ( Dziauddin Mat Saad) தெரிவித்தார்.

சிற்றுண்டி நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் கண்காணிப்பின்போது, ​​பயன்படுத்தப்படாத குளிர்சாதனப் பெட்டி ஒன்றின் பின்னால் தரையில் எலி எச்சங்கள் கண்டறியப்பட்டன.

1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் பிரிவு 11-இன் கீழ், சுகாதாரமற்ற உணவு வளாகத்திற்கான மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக Dziauddin ) கூறினார்.

இதுவரை, மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு நச்சுணவு தொடர்பான எந்தச் சம்பவங்களும் பதிவாகவில்லை.

பள்ளி மூடப்பட்டிருக்கும் காலத்தில் , ஒரு விற்பனையாளர் மூலம் மாணவர்களுக்கு உணவு வழங்க பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!