ஜோகூர் பாரு, செப்டம்பர்-19 – சிங்கப்பூரில் mpox சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஜோகூரில் உள்ள நாட்டின் எல்லைப் பகுதியில் கடுமையான சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான செயல்பாடுகளையோ போக்குவரத்து ஓட்டத்தையோ பாதிக்காது.
சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் விவகாரங்களுக்கான ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Ling Tian Soon அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
தற்போதைக்கு சுகாதார அமைச்சின் வழிகாட்டிகள் பின்பற்றப்படுகின்றன.
அவ்வகையில், ஜோகூரில் உள்ள சோதனைச் சாவடிகளில், பயணிகள் ஏதேனும் அறிகுறிகள் கொண்டிருந்தால் அவற்றை அறிவிக்க வேண்டும்;
அதோடு வழக்கமான வெப்பநிலை சோதனைகளும், visual முறையிலான சோதனைகளும் நடத்தப்படுகின்றன.
என்றாலும், சோதனைச் சாவடிகளில் செயல்பாடுகள் சுமூகமாகப் போவதாக அவர் சொன்னார்.
ஆகஸ்ட் 17-ஆம், மலேசியா இவ்வாண்டுக்கான தனது முதல் mpox சம்பவத்தைப் பதிவுச் செய்தது.
அது, குறைந்த ஆபத்துடைய Clade II mpox மாறுபாடாகும்.
அதே வகை mpox கிருமியை உட்படுத்தி சிங்கப்பூரில் இதுவரை 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.