Latestஉலகம்

​”எல்லோரும்தான் இலாபம் சம்பாதிக்கிறார்கள்”: 1.2 பில்லியன் டாலர் கிரிப்டோ வருவாயைத் தற்காத்துப் பேசிய ட்ரம்ப்

வாஷிங்டன், ஜூலை-2 – அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், கிரிப்டோகரன்சி (cryptocurrency) வர்த்தகம் மூலம் தாம் ஈட்டிய சுமார் 1.2 பில்லியன் டாலர் வருவாயை நியாயப்படுத்தியுள்ளார்.

தனது நிர்வாகம் கிரிப்டோ துறைக்குச் சாதகமான சட்டங்களைக் கொண்டு வந்ததால் தான் இந்த லாபம் கிடைத்தது என்ற குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

​செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆவேசமாகப் பதிலளித்த ட்ரம்ப், “நான் ஏன் இலாபம் ஈட்டுகிறேன் என்று கேட்பதில் நியாயமில்லை; தற்போது அமெரிக்கப் பங்குச்சந்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது, அதனால் நாட்டு மக்கள் அனைவருமே இலாபம் சம்பாதிக்கிறார்கள், நானும் அதில் விதிவிலக்கல்ல” என்று கூறி தனது சொத்துக்குவிப்பை தற்காத்துப் பேசினார்.

இந்நிலையில், ​ட்ரம்பின் குடும்பத்தினர் நடத்தும் World Liberty Financial நிறுவனம் மற்றும் Trump Meme Coins மூலம் மட்டுமே இந்த பிரம்மாண்ட வருவாய் கிடைத்துள்ளது.

எனவே, நிதி ஆதாயங்களுக்காக அதிபர் பதவி பயன்படுத்தப்படவில்லை என்றும், கிரிப்டோ சந்தையின் எழுச்சியே இந்த இலாபத்திற்குக் காரணம் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!