Latestமலேசியா

கப்பாளா பத்தாஸ் போலீஸ் நிலையத்தின் ஒரு அறை தீயில் எரிந்தது

அலோஸ்டார், , ஏப் 23- Kepala Batas சிலுள்ள போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அறையொன்று முற்றிலுமாக அழிந்தது.

அதிகாலை மணி 1.56 க்கு இது குறித்து அவசர அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக அலோஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் இஸ்மாயில் முகமட் ஸைன் (Ismail Mohd Zain) தெரிவித்தார்.

போலீஸ்துறையின் சாலைத் தடுப்பு உபகரணங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

அரசு வளாகத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில், அந்த அறையில் 80 விழுக்காடு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

அதிகாலை மணி 2.15 க்கு தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் மதிப்பு குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் எந்தவொரு உயிரிழப்பு அல்லது எவரும் காயம் அடையவில்லை என முகமட் ஸைன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!