
ஜெம்போல், ஜூலை-24-நெகிரி செம்பிலானில் Pakatan Harapanனின் மந்திரி பெசார் வேட்பாளர் தொடர்பில் அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki வெளியிட்டுள்ள கருத்து, ஒரு வைரி அரசியல் கட்சியின் “தீங்கிழைக்கும் பேச்சு” என DAP கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வர்ணித்திருக்கிறார்.
அது குறித்து பேசிய அவர், ‘எங்கள் மந்திரி பெசார் வேட்பாளர் ஒரே ஒருவர்தான்; அவர் Tok Min எனும் Aminuddin ஆவார்’ என்றார். நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பின்படி, மந்திரி பெசார் பதவிக்கு மலாய் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே தகுதியுடையவர் என்பதால் அப்பதவிக்குத் தாம் தகுதியற்றவர்’ என்றும் லோக் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் Linggi தொகுதியில் இடைக்கால மந்திரி பெசார் Datuk Seri Aminuddin Harun தோல்வியுற்றால், PH கூட்டணியின் அடுத்த மந்திரி பெசார் வேட்பாளர் யார் என்று அறிவிக்குமாறு Asyraf இதற்கு முன் சவால் விடுத்திருந்தார்.
Aminuddinனுக்கு பதிலாக PH யாரை முன்மொழியும்? அந்தோணி லோக் அப்பதவிக்கு நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதா என்றும் Asyraf கேள்வி எழுப்பியிருந்தார்.



