
கோலாலம்பூர், செப்டம்பர்-20,
கல்வி முறையில் அதிருப்தியுடைய மக்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் இடம் பெற்றுள்ளது.
30 நாடுகளை உட்படுத்திய Ipsos ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
மலேசியர்களில் 44 விழுக்காட்டினர் மட்டுமே நாட்டின் கல்வி முறை மீது நல்ல எண்ணம் கொண்டுள்ளனர்.
சமமற்ற கல்வி வாய்ப்புகள், மோசமான கட்டமைப்பு வசதிகள், குறைந்த தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றை அவர்கள் முக்கிய சவால்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆய்வில், நால்வரில் ஒருவர் மட்டுமே தொழில்நுட்ப பயன்பாடு பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் என்று நம்புகின்றனர்.
ஆனால், ChatGPT போன்ற AI கருவிகளை ஏற்கும் மனப்பாங்கு உலக சராசரியை விட மலேசியர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
அதே சமயம், 14 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடைச் செய்ய வேண்டும் என 70 விழுக்காட்டினர் ஆதரித்துள்ளனர்.
மிக முக்கியமான பிரச்னையாக இளைஞர்களின் மனநலம் 37 விழுக்காடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது உலக சராசரியை விட மிக அதிகமாகும்.
இந்நிலையில் சமத்துவமான வாய்ப்புகள், நவீன கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலுக்குத் தான் உண்மையான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்; மாறாக ஆரம்பப் பள்ளி சேர்க்கை வயதை குறைப்பது அல்ல என Ipsos ஆய்வு நிறுவனத்தின் மலேசிய நிர்வாக இயக்குனர் அருண் மேனன் கூறினார்.