Latestமலேசியா

கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவம்; 11 பேர் உயிரிழப்பு & 13 பேர் மீட்பு

 

லங்காவி, நவம்பர் -10,

மலேசியா–தாய்லாந்து கடற்கரை எல்லைக்கு அருகில் கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவத்தில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்கப்பலில் மொத்தம் 70 பேர் பயணித்ததைத் தொடர்ந்து, அதில் மேலும் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ‘Rohingya’-வை சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகின்றது.

இந்நிலையில், மலேசிய கடல்சார் அமைப்பு ஏழு உடல்களை கண்டெடுத்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து அதிகாரிகள் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு உடல்களை மீட்டுள்ளனர்.

இரு நாடுகளும் வான்வழி மற்றும் கடல்வழி தேடுதல் நடவடிக்கைகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றன என்றும் தேடுதல் நடவடிக்கை ஏழு நாட்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் மலேசிய கடல்சார் அமலாக்கத்தின் கெடா மற்றும் பெர்லிஸ் மாநில இயக்குநர் ரோம்லி முஸ்தபா (Romli Mustafa) தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் தகவலின்படி, அக்கப்பல் மியான்மார் மற்றும் வங்காளதேசத்தின் எல்லையருகிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன் புறப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சிலர் கடந்த வியாழக்கிழமை அன்று மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!