காசா, செப்டம்பர் -1, காசா முனையில் 88 விழுக்காட்டுப் பகுதிகள் இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்று விட்டன.
மனிதநேய விவகாரங்களுக்கான ஐநாவின் ஒருங்கிணைப்பு அமைப்பான OCHA அந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலியப் படைகள் உடனடி வெளியேற்றத்துக்கு உத்தரவிட்டதால், 23 லட்சம் அப்பாவி பாலஸ்தீனர்கள் பாதுகாப்புத் தேடி அலைகின்றனர்.
ஆனால், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாதுகாப்பான இடமாக காசாவில் எஞ்சியிருப்பதோ வெறும் 12 விழுக்காட்டு இடங்கள் மட்டுமே என அவ்வமைப்பு கவலைத் தெரிவித்தது.
நேரம் காலம் கருதாமல் உடனடி வெளியேற்றத்துக்கு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது, அனைத்துலக மனிதநேய விதிமுறைகளை மீறும் செயலாகும்.
ஒரு பேச்சுக்குக் கூட மனிதநேயம் என்ற ஒன்று அங்கில்லை என்பதே நிதர்சன உண்மையென OCHA வருத்தம் தெரிவித்தது.
தொடர் தாக்குதகளால், அனைத்துலக மனிதநேய உதவிக் குழுக்களாலும் உதவிகளைக் கொண்டுச் சேர்க்க முடிவதில்லை.
இதனால் ஒன்றுமறியா குழந்தைகளும் பெண்களும் வயதானவர்களும் பசி பட்டினியில் வாடுவதோடு நோயில் விழுந்து விடுகின்றனர்.
போர் நிறுத்தம் ஏற்படாத வரை பாலஸ்தீன மக்களின் அவலம் தீராதென அவ்வமைப்பு எச்சரித்தது.