
கோலாலம்பூர், நவம்பர்-11,
ZUS Coffee-யின் ஒரு கிளையில் ஒரு வாடிக்கையாளரால் ஊழியர் மீது காப்பி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வைரலான அச்சம்பவத்துக்குப் பிறகு, அந்த ஊழியர் தற்போது ஓய்வெடுத்து அதிலிருந்து மீண்டுவரும் நிலையில் உள்ளார் என Zus Coffe விளக்கியது.
“மரியாதையற்ற எந்தவொரு நடத்தைக்கும் இடமில்லை என்றும், அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக இருக்கக் கூடிய சூழலை உருவாக்குவதே எங்களின் நோக்கம்” என்றும் அறிக்கை வாயிலாக அது கூறிற்று.
தொழிலாளர் பக்கமே தாங்கள் நிற்பதையும் அந்நிறுவனம் மறுஉறுதிபடுத்தியது.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு ஆதரவு தெரிவித்து, நிர்வாகம் எந்தவிதமான தண்டனையும் விதிக்கக்கூடாது என வலியுறுத்தினர்.
“வாடிக்கையாளர் எப்போதும் சரி” என்ற கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் பலர் கூறி வருகின்றனர்.



