Latestமலேசியா

கார்ப்பரேட் மாஃபியா விவகாரம்: RM9.5 மில்லியன் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை வெளியிட ரஃபிஸிக்கு ரமணன் சவால்

கோலாலம்பூர், வியாழக்கிழமை: தாம் ஒரு தொழிலதிபரிடமிருந்து 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி அதை வெளியிட வேண்டும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ
ரமணன் ராமகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு ஆறு அல்லது ஏழு மாதங்களாக நீடிப்பதாகக் கூறிய அவர், இதுவரை அதனை நிரூபிக்கும் ஆவணம் எதுவும் வெளியிடப்படவில்லை என்றார். ஆதாரம் இருப்பதாகத் தொடர்ந்து கூறுவதற்குப் பதிலாக, அதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ரஃபிஸி தம்மிடமிருந்து இன்னும் வழக்குத் தாக்கல் அறிவிப்பு எதனையும் பெறவில்லை என்று கூறியதையும் ரமணன் கேள்விக்குட்படுத்தினார். இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் சட்ட நடவடிக்கையைத் தாம் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைக்கு தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பே தமது முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தம்மீதான குற்றச்சாட்டு ரஃபிஸி தொடர்பான பிற விவகாரங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பப் பயன்படுத்தப்படுவதாகவும் ரமணன் கூறினார்.

கார்ப்பரேட் மாஃபியா விவகாரத்தில் அமலாக்க அமைப்புகளுடன் தொழிலதிபர்கள் கூட்டுசேர்ந்திருக்கக்கூடும் எனும் கேள்விக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விளக்கம் போதுமானதாக இல்லை என்று ரஃபிசி விமர்சித்திருந்தார்.

முன்னதாக, அமைச்சர் ஒருவர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அன்வார், அது ஆதாரமற்ற அரசியல் கருத்து என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!