Latestமலேசியா

கிளானா ஜெயா எல்.ஆர்.டி சேவை பாதையில் அத்துமீறு நுழைந்து இடையூறு ஏற்படுத்திய ஆடவன், சி.சி.டிவி காட்சியில் சிக்கினான்

கோலாலம்பூர், அக்டோபர் 9 – அண்மையில், கிளானா ஜெயா எல்.ஆர்.டி பாதையில், அத்துமீறி நுழைந்து, அதன் சேவையை இடையூறு செய்த சந்தேக நபரைக் காவல் துறை அதிகாரிகள் நெருங்கி வருகின்றனர்.

சி.சி.டிவி காட்சியில் பதிவான அந்த சந்தேக நபரின் காணொளி மற்றும் புகைப்படத்துடன் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி (Datuk Rusdi) கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இரவு 7 மணி வாக்கில், எல்.ஆர்.டி பணியாளர்கள் மட்டுமே செல்லும் பாதையை அணுகுவதற்காக, அந்த சந்தேக நபர் அத்துமீறி வாயிற் கதவின் மேல் ஏறியுள்ளான்.

அதனைத் தொடர்ந்து, தேடுதல் நடவடிக்கையை எளிதாக்குவதற்காகத் தற்காலிகமாக மின் விநியோகத்தையும் தூண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால், மஸ்ஜித் ஜமேட் (Masjik Jamek), பங்சார் (Bangsar), கே.எல்.சென்ட்ரல் (KL Sentral) மற்றும் கம்போங் பாரு (Kampung Baru) ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் பாதிக்கப்பட்டு, அன்று இரவு 8 மாணி வாக்கில் முழு சேவைக்கு திரும்பியிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!