
கிளானா ஜெயா, செப்டம்பர்-26 – கிளானா ஜெயா LRT இரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், ஆடவர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை Dato Keramat மற்றும் Jelatek நிலையங்களுக்கு இடையில் சென்றுகொண்டிருந்த LRT இரயிலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கூட்ட நெரிசல் மிகுந்த இரயிலில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஆடவர் திடீரென தம்மை குத்தியதாக 45 வயது அம்மாது தனது சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.
தாக்குதலுக்குப் பின்னர், அங்கிருந்த மற்ற பயணிகள் தமக்கு உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து செவ்வாய் இரவே போலீஸிஸ் அம்மாது புகார் செய்ய, சம்பவத்திற்கான காரணம் மற்றும் சந்தேக நபர் குறித்த மேல் விவரங்களை கண்டறியும் நடவடிக்கைகள் தொடருகின்றன.



