
கிள்ளான், ஏப்ரல்-12- சிலாங்கூரில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மேலுமொரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வெள்ளத்தின் போது மின்சாரம் தாக்கி மாண்டதாக நம்பப்படுகிறது.
24 வயது அந்த உள்ளூர் ஆடவரின் சடலம், கிள்ளான், கம்போங் பாடாங் ஜாவா, லோரோங் லெம்பா டுவாவில் தரை வீட்டில் கிடந்தது.
உடலில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
வெள்ளமேறிய வீட்டில் கைப்பேசியை charge செய்யும் போது மின்சாரம் தாக்கி அவ்விளைஞர் உயிரிழந்திருக்கலாமென இக்பால் சொன்னார்.
இன்று காலை சவப்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
முன்னதாக, 27 வயது இலங்கை ஆடவர் இந்த திடீர் வெள்ளத்தில் பலியானார்.
ஷா ஆலாம், செக்ஷன் 25-ல் கட்டுமானப் பொருட்களின் சேமிப்புக் கிடங்கின் வெளித் தரையில் அவர் இறந்துகிடந்தார்.
அவ்வாடவரும் மின்சாரம் தாக்கியே பலியானதாக நம்பப்படுகிறது.
அவரைப் போலவே மின்சாரம் தாக்கி நாய் ஒன்றும் அருகிலேயே இறந்துக் கிடந்தது.