Latestமலேசியா

குடிபோதையில் எதிர் திசையில் காரோட்டிய சீன பிரஜை மற்றொரு காரை மோதினார்.

சுங்கைப் பட்டாணி, ஏப் 27- சுங்கைப் பட்டாணி , Jalan Lencongan Barat, ட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு எதிராக வாகனத்தை எதிர் திசையில் ஓட்டிச் சென்ற சீன பிரஜை ஒருவர் மது போதையில் இருந்ததால் அவரது கார் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த நபரின் வாகனம் அபாயகரமாக ஓட்டப்பட்டதால் அது தொடர்பான காணொளி இன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து நேற்று இரவு 11.30 மணிக்குத் தனது துறைக்குத் தகவல் கிடைத்ததாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் ஹன்யான் ரம்லான் ( Hanyan Ramlan ) தெரிவித்தார்.

சீன பிரஜையின் உறவினர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சுவாசிக்கும் பரிசோதனை மற்றும் இரத்த மாதிரியை வழங்க மறுத்ததற்காக இந்த விவகாரம் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42ஆவது விதி மற்றும் 45 ஆவது விதி (C) 6 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக ஹன்யான் குறிப்பிட்டார்.

சந்தேக நபருக்கு முகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டதோடு , அவர் சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனை வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

50 வயதுக்குட்பட்ட அந்த ஆடவர் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் என்றும் அவர் கருப்பு நிற பொரோடுவா மைவி காரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலுக்கு எதிராக ஓட்டியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!