Latestமலேசியா

குறைந்தபட்ச ஊதிய உயர்வு: இன்னும் முடிவு இல்லை

கோலாலம்பூர், செப்டம்பர் 30 – 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது குறித்து அமைச்சரவை இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையென்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேலும் சில அம்சங்களை கவனமாக ஆய்வு செய்யுமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரவிட்டதாக அவர் கூறினார்.

குறைந்தபட்ச ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு அக்டோபர் 9ஆம் தேதி 2027 வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் போது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தற்போது தனியார் துறையின் குறைந்தபட்ச ஊதியம் 1,700 ரிங்கிட்டாக உள்ளது. அதேவேளை, அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்களில் (GLICs) குறைந்தபட்ச ஊதியம் 3,100 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் ஊதியம் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப போதுமான அளவில் உயரவில்லை என்று பிரதமர் முன்பு தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!