Latestமலேசியா

குறைந்த விலையில் பொருட்கள் வாங்க வேண்டுமா? கடைக்குச் செல்லும் முன் PriceCatcher செயலியில் விலைகளை ஒப்பிடுங்கள்

கோலாலாம்பூர், அக்டோபர்-28,கடைக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும் முன், எந்தக் கடையில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?அதற்கு உதவுகிறது அரசாங்கத்தின் PriceCatcher செயலி..

உதாரணமாக, இன்று சமைக்கக் கோழி இறைச்சி வாங்கப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பே PriceCatcher செயலியைத் திறந்து, உங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளில் கோழி இறைச்சியின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

எந்தக் கடையில் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது, எந்தக் கடையில் வாங்குவது சிக்கனமானது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

இந்த விலைகள் வெறும் கணிப்புகள் அல்ல என்கிறார் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில்.

ஒவ்வொரு மாதமும் 2 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களின் விலைப் பதிவுகள் நேரடியாகக் களத்தில் சேகரிக்கப்பட்டுச் சரிபார்க்கப்படுகின்றன.

மக்கள் பொருட்களின் விலைகளை எளிதாக ஒப்பிட்டு, சிக்கனமாக வாங்குவதற்கு உதவும் நோக்கில்தான் அரசாங்கம் இந்த PriceCatcher செயலியை உருவாக்கியுள்ளதாக ஃபாஹ்மி சொன்னார்.

எனவே, இனி கடைக்குச் செல்வதற்கு முன் PriceCatcher செயலியில் விலைகளைச் சரிபார்த்துப் பாருங்கள்.

குறைந்த விலை எங்கே? அதிகச் சேமிப்பு எங்கே? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!

சுலபம்தானே?

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!