Latestமலேசியா

குளுவாங் சாலை விபத்தில் கணவன், மனைவி பலி; 2 மகள்கள் படுகாயம்

குளுவாங், அக்டோபர்-3,ஜோகூர், குளுவாங் அருகே இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த நிலையில், அவர்களது இரு மகள்கள் படுகாயமடைந்தனர்.

பத்து பஹாட்–மெர்சிங் சாலையின் 72.5-ஆவது கிலோ மீட்டரில், சுங்கை கஹாங் அருகே நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.

54 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற Hyundai Matrix கார், சாலை வழுக்கும் நிலையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசை பாதைக்குள் நுழைந்து லாரியுடன் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் காரை ஓட்டிய ஆடவரும், அவரது 49 வயது மனைவியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களது 24 மற்றும் 21 வயதுடைய இரு மகள்களும் படுகாயமடைந்து, குளுவாங் Enche’ Besar Hajjah Khalsom மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

34 வயது லாரி ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!