
குவாந்தான், ஜூலை-24-பஹாங், குவாந்தானில் உள்ள Teluk Sisek கடற்கரையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிரும் ‘நீலக் கண்ணீர்’ எனப்படும் அரிய இயற்கை விசித்திரம் பொது மக்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
இந்த ஒளிரும் நிகழ்வானது ‘உயிரியல் ஒளிர்தல்’ என்றழைக்கப்படுகிறது.
கடல் உயிரினங்களில் ஏற்படும் இயற்கையான உயிரியல் இரசாயன எதிர்வினையால் இந்த நீல நிற ஒளி உருவாகிறது
இந்த அழகிய காட்சினையைக் காண இரவு வேளையில் ஏராளமான பார்வையாளர்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் நோக்கில், மலேசியப் பொதுத் தற்காப்புப் படையான APM அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இரவு நேரங்களில் ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், கடல் அலையின் சீற்றத்தைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் APM பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.



