
குவா மூசாங், ஜனவரி-14, கிளந்தான், ஜாலான் குவா மூசாங் – குவாலா கிராய் சாலையின் 10-வது கிலோ மீட்டரில் 2 வாகனங்கள் மோதிக்கொண்டதில், ஓர் ஆடவர் தீயில் கருகி மாண்டார்.
நேற்று மாலை 5.18 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில், தான் ஓட்டி சென்ற Proton Saga கார் தீப்பற்றி 100 விழுக்காட்டு எரிந்துபோனதில், நொறுங்கிய அதன் இடிபாடுகளில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
காரோட்டி அருகே அமர்ந்திருந்த பயணி காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவர் மோதியது Toyota Hilux வாகனமாகும்.
அதன் ஒட்டுநரும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.