Latestமலேசியா

கூச்சிங்கில் ஓடும் பேருந்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்த பெண்; தாயும் சேயும் நலம்

கூச்சிங், செப்டம்பர்-25,சரவாக், கூச்சிங்கில் ஓடும் பொதுப் பேருந்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, பேருந்திலேயே வெற்றிகரமாகப் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

​நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த அந்தப் பெண்ணுக்குத் திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.

நிலைமையை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தை ஜாலான் மஸ்ஜித் கிளினிக்கின் முன் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று அங்கிருந்த மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தார்.

​தகவல் கிடைத்ததும் உடனடியாகச் செயல்பட்ட மருத்துவர்களும் தாதியர்களும், மருத்துவ உபகரணங்களுடன் விரைந்து வந்து பேருந்தினுள்ளேயே அப்பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர்.

​மருத்துவக் குழுவினரின் துரித நடவடிக்கையால் குழந்தை பாதுகாப்பாகப் பிறந்தது.

தற்போது தாயும் சேயும் மேல் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காகச் சரவாக் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

​இச்சேவை தொடங்கப்பட்ட பிறகு, பொதுப் பேருந்து ஒன்றில் குழந்தை பிறந்திருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் மருத்துவக் குழுவினரின் இந்த துரித நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!