ஷா அலாம், நவ 19 – கெமுனிங்-ஷா ஆலம் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் 65 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் காரின் போனட்டிலிருந்து உபரி டயரை எடுக்கும்போது நான்கு சக்கர வாகனம் மோதி மரணம் அடைந்தார்.
காருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தையும் பஞ்சர் ஆன காரையும் மோதுவதை பேருந்து ஒன்று தவிர்க்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ACP முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடுமையான காயத்திற்கு உள்ளான அந்த ஆடவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 ஆவது விதி (உட்பிரிவு 1 இன் ) கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதனிடையே இந்த விபத்து சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் ஷா அலாம் மாவட்ட போலீஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளும்படி இக்பால் கேட்டுக்கொண்டார்.