
கோத்தா கினாபாலு, மே-14-சபாவில் சுமார் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலங்கு பாகங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று காலை கோத்தா கினாபாலு, ஜாலான் காயாவில் உள்ள ஒரு பழங்காலப் பொருட்கள் விற்கும் கடையில் நடத்தப்பட்ட சோதனையில், 53 வயது கடை உரிமையாளர் கைதுச் செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில், புலி மற்றும் கரடியின் பற்கள், காட்டுப்பன்றியின் தந்தங்களும் அடங்கும்.
தவிர, மிகவும் அரிதான 13 ‘பெஸோவர்’ கற்கள் (Bezoar stones), சுமார் 2.3 கிலோ எடையுள்ள குருவிக்கூடுகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த உடல் பாகங்கள் தாவாவ் பகுதியில் உள்ள கிராம மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு, கோத்தா கினாபாலுவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டது, தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறையான உரிமம் இன்றி இந்தப் பொருட்களை வைத்திருந்ததற்காக கடை உரிமையாளர் மீது சபா வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



