Latestமலேசியா

RM11,600 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் ‘காவடி’; கான்வார் யாத்திரையில் கவனம் ஈர்த்த பக்தர்கள்!

உத்தரப் பிரதேசம் – கையில் RM11,600 இருந்தால் என்ன செய்வீர்கள்? இங்கு பக்தர்கள் அந்தப் பணத்தையே ‘காவடியாக’ மாற்றி தோளில் சுமந்து சென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்!

உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூரில் நடைபெற்று முடிந்த கான்வார் யாத்திரையில், ₹2.70 லட்சம் – அதாவது சுமார் RM11,600 மதிப்பிலான உண்மையான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு இந்த வித்தியாசமான காவடி உருவாக்கப்பட்டுள்ளது.

நோட்டுகள் சேதமடையாமல் இருக்க அவை ‘laminate’ செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பிற்காக போலீசாரும் உடன் சென்றுள்ளனர்.

அதுமட்டுமல்ல! சிவபெருமான் ‘Sports Car’-இல் பயணிப்பது போன்ற காவடி, திறந்ததும் காளி தேவியின் பிரமாண்ட உருவம் வெளிப்படும் காவடி என இவ்வாண்டு யாத்திரையில் பல புதுமையான வடிவமைப்புகள் பக்தர்களையும் பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன.

பக்தி ஒரு பக்கம்… படைப்பாற்றல் இன்னொரு பக்கம்! இரண்டையும் இணைத்த இந்த வித்தியாசமான காவடிகள், யாத்திரையில் மட்டுமின்றி தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!