Latestஉலகம்மலேசியா

தாய்லாந்தில் 166 கிலோ மெத்தாம்பெட்டமைனுடன் மலேசிய வாலிபர் கைது; போதைப்பொருள் மதிப்பு RM8 மில்லியன்

பேங்கோக், ஆகஸ்ட்-13-தாய்லாந்தில் 8 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 166 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் 20 வயது மலேசிய இளைஞர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, Hua Hin பகுதியில் தாய்லாந்து போலீஸாரின் சோதனைச் சாவடியைத் தப்பிச் செல்ல முயன்ற வெள்ளை நிற BMW காரை அதிகாரிகள் துரத்திச் சென்று பிடித்தனர்.

​காரைச் சோதனையிட்டபோது, அதற்குள் பூட்டப்பட்ட பல பயணப் பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பெட்டிகள் தன்னுடையது அல்ல என்றும், அவற்றின் கடவுச்சொல் தனக்குத் தெரியாது என்றும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

​ஆனாலும், சோதனையில் அந்தப் பைகளில் இருந்து 166 கிலோ ஐஸ் மெத் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

பேங்காக்கில் இருக்கும் ஒரு சீனப் பிரஜையின் வழிகாட்டலில், அங்கிருந்து Hatyai மற்றும் தென் தாய்லாந்துக்கு இந்தப் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகப் போலீஸ் சந்தேகிக்கிறது.

கைதான மலேசிய இளைஞரிடம் தாய்லாந்து போலீஸ் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!