
சபா, அக்டோபர் 2 – சபா, தம்பாருளியில் (Tamparuli) இரு பெண்கள் சென்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நேற்று இரவு 7 மணியளவில், கினாபாலு மலையில் ஏறிவிட்டு கோத்தா கினபாலுவுக்குத் திரும்பியபோது இந்தச் சம்பவம் நடந்தது. அந்தப் பகுதியை நன்கு அறியாத ஓட்டுநர், மோசமான வானிலையிலும் இருள் சூழ்ந்த நிலையிலும் வழிகாட்டி செயலியை மட்டுமே நம்பி சென்றுள்ளார்.
தம்பாருளி low level crossing பாலத்தை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த வெள்ள நீரில் கார் சிக்கியது. பொதுமக்கள் உடனடியாக உதவி செய்து, இரு பெண்களையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் காரில் இருந்த சில பொருட்கள் மற்றும் அடையாள ஆவணங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ஒன்பது மாதங்களாக பழுதுபார்க்கும் பணிக்காக மூடப்பட்டிருந்த பாலம், சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது வெள்ளம் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது.



