ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-21,சமூக ஆர்வலர் ஒருவருக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கில் பேராசிரியர் Dr பி.ராமசாமி வெற்றிப் பெற்றுள்ளார்.
கருணை ஓவியம் என்ற அரசு சார்பற்ற அமைப்பின் தலைவர் எஸ்.முருகேசன் என்பவருக்கு எதிராக, கடந்தாண்டு மே மாதம் ராமசாமி அவ்வழக்கைப் பதிவுச் செய்திருந்தார்.
பினாங்கு மாநில இரண்டாவது துணை முதலமைச்சராக இருந்த போது ஊழல் மற்றும் அதிகார முறைகேடு செய்ததாக, சமூக ஊடகங்களில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு முருகேசன் அவதூறு பரப்பியதாக ராமசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றம், முருகேசனின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் அதனால் ராமசாமியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் தீர்ப்பளித்தது.
பினாங்கு வீடைமைப்புத் திட்டத்தில் முறைகேடு என்பது உள்ளிட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், வீடியோ வடிவில் வேண்டுமென்றே மூன்றாம் தரப்புடன் பகிரப்பட்டுள்ளது.
தனது ‘கருத்துகள்’ நியாயமானவை என்றும் பொதுநலன் கருதியவை என்றும் முருகேசன் வைத்தை வாதங்களையும் நீதிபதி Helmi Ghani நிராகரித்தார்.
இதையடுத்து முருகேசன் 175,000 ரிங்கிட்டை ராமசாமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டுமென Helmi உத்தரவிட்டார்.
தவிர 5,000 ரிங்கிட் செலவுத் தொகையும் விதிக்கப்பட்டது.