கோலாலம்பூர், மே-26 – சரவாக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில் RM35 million ரிங்கிட் பெறுமானமுள்ள கடத்தல் பொருட்களுடன் 10 வெளிநாட்டவர்கள் உட்பட 14 பேர் கைதாகினர்.
மே 20 முதல் 23 வரை 4 இடங்களில் அச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களில் மதுபானங்கள், சிகரெட்டுகள், உதவித் தொகைப் பெறப்பட்ட டீசல் ஆகியவையும் அடங்கும்.
இவ்வேளையில், இவ்வாண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய 82 சோதனை நடவடிக்கைகளில் பல்வேறு குற்றங்களுக்காக 185 பேர் கைதானதாக புக்கிட் அமான் கூறியது.
அக்காலக்கட்டம் நெடுகிலும் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களின் மதிப்பு மட்டும் 23 கோடி ரிங்கிட்டைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.
இது போன்ற கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க போலீஸ் தொடர்ந்து போராடும்.
அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் முக்கியம் என புக்கிட் அமான் கேட்டுக் கொண்டது.