கூச்சிங், செப்டம்பர்- 23, சரவாக், காப்பிட்டில் (Kapit) உள்ள Song காட்டுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர், சட்டவிரோத வேட்டைக்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கார்ப்பரல் நிலையிலான 28 வயது அவ்வாடவர் Kapit மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் போது இன்று காலை மரணமடைந்ததை, சரவாக் போலீஸ் ஆணையர் டத்தோ மன்ச்சா ஆட்டா (Datuk Mancha Ata) உறுதிபடுத்தினார்.
இன்று விடியற்காலை காட்டுப் பகுதியில் வேட்டையாடிய பொது மக்களில் ஒருவர் கிளப்பிய துப்பாக்கிச் சூடு பட்டு, சம்பந்தப்பட்ட இராணுவ வீரர் இடுப்பு மற்றும் இடது தொடையில் காயமடைந்தார்.
மரணமடைந்தவர், ராயல் ரேஞ்சர் படைப்பிரிவின் 3-வது காலாட்படையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது.
அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாகக் கூறிய Datuk Mancha, சந்தேக நபரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் சொன்னார்.