Latestஅமெரிக்காஉலகம்

சாதனை சிகிச்சை: பன்றி சிறுநீரகத்துடன் 9 மாதங்கள் உயிர் வாழ்ந்து மனித சிறுநீரகத்தைப் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த நோயாளி

வாஷிங்டன், செப்டம்பர்-15,மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி சிறுநீரகத்தைப் பொறுத்தி, 9 மாதங்கள் வெற்றிகரமாக வாழ்ந்த அமெரிக்க நோயாளி ஒருவர், தற்போது மனித சிறுநீரகத்தைப் பெற்றுப் புதிய மருத்துவச் சாதனை படைத்துள்ளார்.

​அமெரிக்காவைச் சேர்ந்த 66 வயதான Tim Andrews, சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து வந்தார்.

அவருக்கு மனித சிறுநீரகம் கிடைக்கத் தாமதமானதால், 2025-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ‘Mass General Brigham’ மருத்துவக் குழுவினர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அவரது உடலில் வெற்றிகரமாகப் பொருத்தினர்.

​சுமார் 271 நாட்கள், அதாவது 9 மாதங்கள் டயாலிசிஸ் உதவி இன்றி அந்தப் பன்றி சிறுநீரகத்துடன் Andrews இயல்பாக வாழ்ந்தார்.

விலங்கு உறுப்பு மாற்று மருத்துவ வரலாற்றிலேயே மனிதர் ஒருவர் இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்தது இதுவே முதல்முறையாகும்.

​பின்னர் பன்றி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அது அகற்றப்பட்டு அவருக்கு மனித சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

இதன் மூலம், மனித உறுப்புகள் கிடைக்கும் வரை பன்றியின் உறுப்புகளை ஒரு தற்காலிகத் தீர்வாகப் பயன்படுத்த முடியும் என்பதை இச்சாதனை நிரூபித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!