
திரெங்கானு, ஜூன் 17 – நேற்று மாலை, திரெங்கானு ஜெர்த்தேவிலுள்ள கம்போங் புக்கிட் கெனக் டோக் குண்டூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், நெல் வயலுக்கு அருகிலுள்ள கால்வாயில் மூன்று வயது சிறுமி மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்று பெசுட் காவல்துறைத் தலைவர் அசமுதீன் அகமது தெரிவித்துள்ளார்.
கொல்லைப்புறத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி, பின் கதவு வழியாக வீட்டை விட்டு வெளியேறி, கால்வாயில் தவறி விழுந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுமார் 300 மீட்டர் தொலைவில் சிறுமி கால்வாயில் மிதந்துக் கொண்டிருப்பதைக் கண்ட, சிறுமியின் மாமா அவளை உடனடியாக பெசுட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்பு குறித்த தகவல்களை மேலும் அறிந்து கொள்ளலாமென்று காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.