Latestமலேசியா

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதே உத்தேச வீட்டுக் காவல் சட்டத்தின் நோக்கம் – சைஃபுடின்

கோலாலாம்பூர், செப்டம்பர்-20,நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவே, ‘வீட்டுக் காவல் சட்டம்’ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

வயதான கைதிகள், நாள்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குறுகிய கால சிறைத் தண்டனை அனுபவிக்கும் குறைந்த குற்றப் பின்னணி கொண்ட கைதிகளை இலக்காகக் கொண்டு இச்சட்டம் உருவாக்கப்படுவதாக அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு, கூட்டரசு மன்னிப்பு வாரியம் நிபந்தனையுடன் கூடிய வீட்டுக் காவல் அனுமதியை வழங்கியுள்ளதை அடுத்து, இவ்விவகாரம் பெரிதாகப் பேசப்படுகிறது.,

ஆனால், இந்த வீட்டுக் காவல் உத்தேசச் சட்டமொன்றும் புதியதல்ல; சிறைச்சாலைகளில் நெரிசலைக் கையாளும் விதமாக 2024-ஆம் ஆண்டு முதற்கொண்டே தாம் பரிந்துரைத்த ஒன்றுதான் என சைஃபுடின் சொன்னார்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள், மின்னியல் கண்காணிப்பு வளையங்கள் (E-M-D) மூலமாக தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, தங்களது இல்லங்களிலேயே தண்டனைக் காலத்தைக் கழிப்பார்கள்.

இது கைதிகளின் மறுவாழ்வுக்கு வழிவகுப்பதுடன், சிறை பராமரிப்புச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொது மக்களின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில், கடுமையான தகுதி வரம்புகளின் அடிப்படையிலேயே கைதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் சைஃபுடின் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!