Latestஉலகம்

ரியாத், யான்பு மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமைக் கோரல்

சனா, செப்டம்பர்-20,சவூதி அரேபியத் தலைநகர் ரியாத் மற்றும் யான்பு (Yanbu) துறைமுக நகரிலுள்ள எண்ணெய் நிலையங்களைக் குறிவைத்து, தாங்களே ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஏமன் நாட்டு ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் உரிமைக் கோரியுள்ளனர்.

​பாலிஸ்டிக் மற்றும் cruise ஏவுகணைகள், ஆளில்லா ட்ரோன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரண்டு இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் Yahya Saree தெரிவித்தார்.

​ரியாத்திலுள்ள முக்கிய மையங்களும், யான்புவிலுள்ள சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் உள்கட்டமைப்புகளும் இதில் குறிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ரியாத் மன்னர் காலிட் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே உள்ள எரிபொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

​அங்குள்ள எரிபொருள் தொட்டி ஒன்றில் பற்றிய தீயை, தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

​இச்சம்பவத்தால் ரியாத் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதாக FlightRadar24 தளம் தெரிவித்தது.

எனினும், பின்னர் சேவைகள் படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்பின.

​இருப்பினும், ஹூதிகள் கூறியுள்ள இந்தத் தாக்குதல்கள் குறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் தரப்பிலிருந்து உடனடி அறிக்கை ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!