Latestஇந்தியா

கைபேசி தவணைத் தொகை பாக்கி: லக்னோவில் இளைஞரின் இரத்தம் கட்டாயமாக எடுக்கப்பட்டு வீட்டுப் பணியாளராக அடைத்து வைக்கப்பட்ட கொடுமை

லக்னோவ், செப்டம்பர்-20,இந்தியாவின் லக்னோவில், வாங்கிய கைப்பேசிக்கான மாதாந்திர தவணைப் பணத்தைச் செலுத்தத் தவறிய இளைஞரிடமிருந்து வலுக்கட்டாயமாக இரத்தம் எடுக்கப்பட்டதுடன் வீட்டுப் பணியாளராகவும் அவர் அடைத்து வைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

​நிரந்தர வேலையற்ற அந்த இளைஞர், ஓராண்டு தவணைத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு சுமார் 130 ரிங்கிட் செலுத்தும் வகையில் அண்மையில் ஒரு கைப்பேசியை வாங்கியிருந்தார்.

​எனினும், அவரால் முதல் மாதத் தவணையைச் செலுத்த முடியாததால் ஆத்திரமடைந்த இரு கடன் வசூலிப்பாளர்கள், செப்டம்பர் 8-ஆம் தேதி அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக ஓர் இரத்த வங்கிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை மிரட்டி ஒரு யூனிட் இரத்தத்தை எடுக்க வைத்ததோடு, அதற்காக வழங்கப்பட்ட பணத்தையும் பறித்துக் கொண்டனர்.

​அத்துடன் நிற்காமல், அவரை ஒருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று 4 நாட்களுக்கும் மேலாக அடைத்து வைத்து, கட்டாய வீட்டு வேலைகளைச் செய்ய வைத்துள்ளனர்.

​மகனைக் காணவில்லை என அவரது தாயார் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!