Latestமலேசியா

சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் மரணம்

சுங்கை பட்டாணி, மார்ச்-25-கெடா, சுங்கை பட்டாணியில் சாலையைக் கடக்கும் போது கார் மோதி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இத்துயரச் சம்பவம் நேற்றிரவு 9 மணிக்கு மேல் Jalan Kota Kuala Muda சாலையில் நிகழ்ந்தது.

நேர் பாதையில் கார் வந்துகொண்டிருந்த போது, அச்சிறுவன் திடீரென இடப்புறத்திலிருந்து சாலையைக் கடந்தான்.

மிக நெருக்கத்தில் வந்து விட்டதால், காரோட்டியால் மோதலைத் தவிர்க்க இயலாமல் போனதாக போலீஸார் கூறினர்.

படுகாயமடைந்த சிறுவன் அருகிலுள்ள கிளினிக் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!